40 படகுகள் எரிந்து நாசம்… கொழுந்துவிட்டு எரிந்த விசாகப்பட்டினம் துறைமுகம்.!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு ஒரு படகில் தீ பற்றியது. ஒரு படகில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்த படகில் பற்றியது.
இதன் காரணமாக மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 35 முதல் 40 ஃபைபர் மீன்பிடி படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. படகுகளில் டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவை இருந்ததால் தீ அடுத்தடுத்த படகுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது.
தீ பற்றியது தெரிந்த உடன் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வீரார்கள், போராடி தீயை அணைத்து தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு படையினர் உடன் கடற்படையினரும் தீயை அணைக்க உதவி செய்தனர்.
இரவு நேரம் என்பதால், படகுகளில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் எதுவும் நல்வாய்ப்பாக ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பான விசாரணையில் மர்ம நபர்கள் யாரேனும் தான் ஒரு படகிற்கு தீ வைத்து இருக்க கூடும் என அப்பகுதி மீனவர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
தீ விபத்து குறித்து விசாகப்பட்டினம் பகுதி போலீசார் வழக்குப்பதிவு தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025