ஆந்திரப்பிரதேச பள்ளிகள் திறக்கப்பட்டதில் 40-50% மாணவர்கள் வருகை..!
ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது. அதனால் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் விதிமுறைகளை கடைப்பிடித்து இன்று ஆந்திரமாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் வகுப்பறைகளை அதிகரிக்கும் முறை அல்லது பகுதி நேரமாக பள்ளிகளில் வகுப்புகளை நடத்துவது இவற்றில் பள்ளிகள் எதையாவது முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் 40 முதல் 50% மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை, கிருமி நாசினி வழங்கப்பட்டு தனி மனித இடைவெளியை பின்பற்றி வகுப்பு நடத்தப்படுகிறது.