இறுதிக்கட்ட தேர்தல் : 1 மணி அளவில்.. 40.09 சதவீத வாக்குப்பதிவு.!
மக்களவை தேர்தல் : மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் காலை 7 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், இமாச்சல பிரதேசம் 48.63 சதவீதத்துடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பீகார் மாநிலம் 35.65 சதவீதத்துடன் பின் தங்கியுள்ளது.
தேர்தல் தொடங்கியதும், இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் ஹிமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மேலும், உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் சோரக்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இவர்களை தவிர, பிரபலங்கள் என பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
மாநில வாரியாக வாக்கு சதவிகிதம்
- இமாசலப் பிரதேசம் – 48.63%
- ஜார்கண்ட் – 46.80%
- மேற்கு வங்காளம் – 45.07%
- சண்டிகர் – 40.14%
- உத்தரப்பிரதேசம் – 39.31%
- பஞ்சாப் – 37.80%
- ஒடிசா – 37.80%
- பீகார் – 35.65%