40 ஆண்டுகள் பாரம்பரியமிக்க மேம்பாலம் இடிந்தது…ஒரு வழியாக எவ்வித உயிர் சேதமும் இல்லை..!!

Default Image
கொல்கத்தா,
கொல்கத்தாவில் இன்று மாலை பழமையான மெஜெர்காத் பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் உடனடியாக மீட்கப்பட்டது. கீழ்பகுதியில் சிக்கியுள்ள வாகனங்களை மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தீயணைப்பு படை, மீட்பு குழு மற்றும் போலீஸ் மீட்பு பணியை தீவிரமாக தொடங்கியது. மிகவும் பழமையான பாலம் மழை காரணமாக விழுந்ததா? முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கிடையே புது பாலம் அப்பகுதியில் கட்டுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. மீட்பு பணியின் போது காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தீவிரமாக மற்றொரு பகுதியில் மீட்பு பணிகள் நடக்கிறது.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இது குறித்த தகவல் அறிந்ததும் விமானம் இல்லாத காரணத்தினால் இரவே கொல்கத்தாவிற்கு திரும்ப முடியாது என வேதனை தெரிவித்துள்ளார்.அவர் டார்ஜிலிங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்  மிகவும் கவலையடைந்துள்ளோன் , நான்  அங்கு பணியிலிருக்கும் மீட்பு குழுவிடம் தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறேன் . என்னால்  முடிந்தவரையில் அங்கு விரைவாக வர  முயற்சி செய்கின்றேன் . இப்போது விமானம் கிடையாது, எனவே திரும்ப முடியவில்லை. இப்போது எங்களுடைய முழு கவனமும் மீட்பு பணியின் மீதே உள்ளது, மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதற்கிடையே விபத்து நேரிட்ட பகுதிக்கு மாநில அமைச்சர்களும் சென்றுள்ளார்கள்.
இந்த விபத்து குறித்து மேற்கு வங்காள மாநில அமைச்சர் பிர்காத் ஹகிம் பேசுகையில், “பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டார்கள்,” என்றார். மேலும் இது மிகவும் பழைய  40 ஆண்டுகள்  பழமையான  பாலம் என்றார். இப்போது எந்தஒரு உயிரிழப்பும் கிடையாது. இருப்பினும் தேடுதல் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது, மேலும் தகவலுக்கு காத்திருப்போம்,” என குறிப்பிட்டுள்ளார்..
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்