தீபாவளி தினத்தன்று முலுகு மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் நான்கு இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை மாலை நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாட சென்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.
இரண்டு பேரின் சடலங்கள் சனிக்கிழமையன்று மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவை நேற்று காலை மீட்கப்பட்டன. இறந்த 4 பேரும் ராயவரபு பிரகாஷ் (19), தும்மா கார்த்திக் (19), கே அன்வேஷ் (20), எஸ் ஸ்ரீகாந்த் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முலுகுவில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தின் ரங்கராஜபுரம் காலனி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து பேசிய இன்ஸ்பெக்டர் கே.சிவா பிரசாத், ஆற்றில் மூழ்கிய நான்கு இளைஞர்கள் அந்த இடத்தில் அதன் ஆழத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஏனெனில் அந்த இடத்தில் ஒரு பழைய மணல் வளைவு உள்ளது, அங்கு ஆற்றின் ஆழம் அதிகரிக்கும்.
மீட்கப்பட்ட நான்கு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வெங்கடபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…