கேரளாவில் இதய நோயால் அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

இதய நோயால் பாதிக்கப்பட்டு கேரளா மருத்துவமனையில் இருந்த குழந்தை, கொரோனாவால் உயிரிழப்பு.
உலகம் வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை பலமாக ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் கோர முகத்தை கட்டிக்கொண்டுள்ளது. முதன் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்ட மாநிலமாக கருதப்பட்ட கேரளாவில் இதுவரை 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 4000 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் தனிமை படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள மலப்புரத்தை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த மூன்று மாதங்களாக இதய நோய் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, இன்று காலை கொரோனா தோற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.