4 வயது மகனை கொலை செய்ய சதித்திட்டம்.! பெண் CEOவிடம் வேறு விதமான விசாரணை…
பெங்களூருவை சேர்ந்த தனியார் IT நிறுவனத்தின் CEO சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்று, கடந்த ஞாயிறு நள்ளிரவில் வாடகை டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டார். விடுதிக்கு வரும்போது இருந்த மகன், திரும்பி செல்லும் போது இல்லை, தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை ஆகியவற்றை கொண்டு விடுதி நிர்வாகம் சார்பில் கோவா போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது.
36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..! 4 வயது சிறுவன் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்.!
அதன் பின்னர் கார் ஓட்டுனரை தொடர்பு கொண்ட கோவா போலீஸ், சுசானா சேத்தை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா எனுமிடத்தில் கர்நாடக போலீஸ் மூலம் கைது செய்தனர் . அவர் கொண்டு வந்த சூட்கேசில் 4 வயது மகனின் சடலம் இருப்பதும் கண்டறியப்பட்டது . இதனை அடுத்து கொலை, கொலைக்கான ஆதாரத்தை மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுசானா சேத் மீது கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து செவ்வாய் காலையில் கோவா அழைத்து வநதனர்.
தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரணை காவலில் இருக்கும் சுசானா சேத்திடம் கோவா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் சுசானா சேத், தான் தனது மகனை கொலை செய்யவில்லை என்றும், சூட்கேஸ் வழக்கத்துக்கு மாறாக எடை அதிகமாக இருந்தது. ஆனால் அதனை நான் அப்போது கொண்டுகொள்ளவில்லை என்றும் பதில் கூறியதாக தகவல் வெளியானது.
தற்போது, தான் (சுசானா சேத்) கடந்த ஞாயிறு அன்று தூங்கி எழுந்த போதே தனது மகன் இறந்துவிட்டார் என்றும் விசாரணையில் கூறியுள்ளார். இதனை அடுத்து சுசானா சேத்தை உளவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவத்தன்று நடந்தது என்ன.? என்ற உண்மையை கண்டறிய கோவா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்தோ, மூச்சுத்திணறல் ஏற்படுத்த வைத்தோ கொலை நடந்து இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், சம்பவம் நடந்த விடுதி அறையில் உள்ள படுக்கையில் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு இருந்தால் உயிர் பிரிய போராட்டம் நடந்து இருக்கும் , ஆனால் அப்படி எந்த அறிகுறியும் அங்கு இல்லை என்றும், அதே நேரத்தில் அங்கு இரண்டு இருமல் மருந்து வெற்று பாட்டில்கள் இருந்த்தும் காவல்துறையினர் வசம் கிடைத்துள்ளது. அதன் மூலம் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.