கட்டிட விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் மஹாராஷ்டிராவில் உயிருடன் மீட்பு!

மஹாராஷ்டிரா கட்டிட விபத்தில் 4 சிக்கியிருந்த வயது சிறுவன் உயிருடன் மீட்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் மூன்றாம் மாடி திடீரென இடிந்து விழ தொடங்கியதை அடுத்து, சில நிமிடங்களிலேயே கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இதில் 60-க்கும் மேற்பட்டோர் தற்பொழுது மீட்கப்பட்ட நிலையில் 14-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த இடத்துக்கு தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்பகுதி மக்களுடன் சேர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த கட்டிட இடிபாட்டில் சிக்கிய 4 வயது சிறுவன் ஒருவன் மீட்பு படையினரால் சிறு காயங்களுடன் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தற்பொழுது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025