Categories: இந்தியா

4 மாநில சட்டசபை தேர்தல்: 8 இடங்களிலும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண்.!

Published by
கெளதம்

தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது.

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. பெரும்பாலும் வெற்றி வாய்ப்புகள், அடுத்த ஆட்சி யாருடையது என்ற விவரங்கள் தெரியவந்து விட்டன.

தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி இந்த முறை 39 தொகுதிகளை மட்டுமே வென்று இருந்தது.  பாஜக 8 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் (AIMIM) 7 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் வெற்றி பெற்றன.

இதில்,  பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்த பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி, குகட்பள்ளி, தந்தூர், கோடாட், கம்மம், வைரா எஸ்டி, கொத்தகுடெம், அஸ்வராப்பேட்டை எஸ்டி மற்றும் நாகர்கர்னூல் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட்டது.

தெலுங்கானா தேர்தல் ஹைலைட்ஸ்… ஆட்சி கோரும் காங்கிரஸ்.! முன்னேறிய பாஜக

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண், திரைப்படத்தில் நடித்துக்கொண்டே ஜனா சேனா கட்சியின் மூலம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடிப்பையும் அரசியலையும் கவனித்து வரும் பவன் கல்யாணின் கட்சி தெலுங்கானா தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி டெபாசிட் இழந்தது. இதனால், ஆந்திரா மாநிலத்தில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த, பவன் கல்யாணுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

7 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

8 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

9 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

9 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

12 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

13 hours ago