ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் 4 பேருக்கு விடுதலை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியவர்களை ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தது.

ஐபிஎல் போட்டி பார்க்கும் பொது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் அதிலும் ஊழல் மற்றும் பல்வேறு பெட்டிங் இருக்கிறது என பல தரப்பு மக்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 13 பேர் சென்னையில் கைதுசெய்யப்பட்டனர். இந்த கைது சம்பவத்துக்கு முன்னதாகவே கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதை தமிழக ‘க்யூ’ பிரிவு போலீஸார் கண்டுபிடித்து 21 பேரிடம் விசாரணையும் நடத்தினர். சென்னை க்யூ பிரிவு எஸ்.பி.யாக இருந்த சம்பத்குமார், போலி பாஸ்போர்ட் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தியபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பிருப்பதை முதலில் கண்டுபிடித்தார்.

மேலும் அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி பணம் வசூலித்த 3 பேர், பின்னர் அந்த வழக்கை விசாரித்து வந்த கியூ பிரிவு கண்காணிப்பாளர் சம்பத்குமாருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. பின்னர் இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த பல புரோக்கர்கள், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மகேந்தர்சிங் ரங்கா என்பவரை அணுகினர். நகைக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்யும் மகேந்தர்சிங் ரங்கா, பல போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். தன்னை அணுகிய புரோக்கர்களிடம் பல லட்சங்களை வசூல் செய்த மகேந்தர்சிங், அதில் சில லட்சங்களை எஸ்.பி. சம்பத்குமாரிடம் கொடுத்து, சிலரை சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் அதை தொடர்ந்து வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பளித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ஐபிஎஸ் அதிகாரி அந்த நான்கு பேரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

11 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

11 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

12 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

13 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

14 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

16 hours ago