மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்.! இரண்டாம் நாளாகதொடரும் பதற்றம்…

Manipur 4 police

மணிப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பயங்கர பதற்றம் நிலவி வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மோரே நகரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் மற்றும் ஒரு BSF வீரர் காயமடைந்தனர். தற்போது, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்னர்.

முன்னதாக, நேற்றைய தினம் தௌபல் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங்சாவ் பகுதியில் குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் தௌபால் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முதல்வர் பிரேன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையாக்கப்பட்ட UPI பணப்பரிவர்த்தனைகள்.! ரூ.2000க்கு மேல் அனுப்பினால் புதிய விதிகள்…

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது நாட்டையே அதிரவைத்தது. அதிலும், அங்கு இரு பெண்களுக்கு ஒரு கொடூர கும்பலால் நேர்ந்த துயரமான சம்பவம் பலரது இதயத்தை உலுக்கியது. இந்த கலவரத்தில் இதுவரை கிட்டத்தட்ட 180 க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்