வளர்ந்த இந்தியாவில் 4 முக்கிய தூண்கள்… பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இலக்கு – பிரதமர் மோடி பேச்சு

Narendra Modi

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் சென்றார். பிர்சா முண்டாவின் சொந்த ஊரான உலிகட்டு கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தய பிரதமர் மோடி, பழங்குடியின வளர்ச்சிக்கான, விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பிரதமரின்  விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 15-ஆவது தவணை தொகையை விடுவித்தார். 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி. பழங்குடி பெருமை நாளையொட்டி ஜார்க்கண்ட் பரப்புரை கூட்டத்தில் விவசாயிகளுக்கு 15-ஆவது தவணை தொகையை விடுவித்தார் பிரதமர்.

ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். சமூக போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடி பெருமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்பின் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பழங்குடியினரின் பெருமை தினம் வாழ்த்துகள். வளர்ச்சியடைந்த இந்திய சங்கல்ப் யாத்திரை இன்று முதல் தொடங்குகிறது.

யார் இந்த சுப்ரதா ராய்.? சஹாரா குழுமமும் இந்திய கிரிக்கெட் அணியும்.!

விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க பழங்குடி மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் இருந்து தொடங்கும் மற்றும் ஜனவரி 26 வரை, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.

இந்த யாத்திரையில் , நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் அரசு மிஷன் முறையில் செல்லும், ஒவ்வொரு ஏழைகளும், அப்போது ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட மக்களும் அரசின் திட்டங்களின் பயனாளிகளாக மாற்றப்படுவார்கள். வளர்ந்த இந்தியாவில் 4 தூண்கள் உள்ளன. முதலாவது – இந்திய பெண்கள், நமது சக்தி. இரண்டாவது – விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், மீன் விவசாயிகள், உணவு வழங்குநர்கள்.

மூன்றாவது – இந்திய இளைஞர்கள் சக்தி. நான்காவது – இந்தியாவின் நடுத்தர வர்க்கம், இந்தியாவின் ஏழைகள். இந்த 4 தூண்களை எந்த அளவுக்கு வலுப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி உயரும். அதாவது,  நாட்டில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் வளர்ச்சியடையும்போது, நாடும் வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே பாஜகவின் இலக்கு. அரசின் திட்டங்களின் பலன்களை அனைவரும் சமமாக, ஒரே உணர்வோடு பெறும்போதுதான் சமூக நீதியை உறுதி செய்ய முடியும். பல தசாப்தங்களாக, சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை பற்றி நம் நாட்டில் நிறைய பேசப்படுகிறது. ஆனால், நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் எதிரான பாகுபாடுக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் அகற்றப்படும்போதுதான் உண்மையான மதச்சார்பின்மை வரும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்