பீகார் மாநிலம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பலி..!
பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஆம்புலன்ஸ் ஒன்று லாரி மீது மோதியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர், மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாலந்தா கிராமத்தில் சாண்டி காவல் நிலைய பகுதி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் குடும்பத்தினர் மூன்று உறுப்பினர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் பீகார் ஷெரீப் காவல் நிலைய பகுதியில் உள்ள செயின்புரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.