இந்தியாவில் மேலும் 4 பேருக்கு உருமாறிய கொரோனா ! மொத்த பாதிப்பு உயர்வு
இந்தியாவில் தற்போது உருமாறிய கொரோனாவால் தற்போது 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனியில் இருந்து திரும்பிய பயணிகளை கண்டறியும் பணிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.பின்பு சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை 25 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில், இன்று மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டதால் தற்போது 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#IndiaFightsCorona#Unite2FightCorona
Update on the persons found infected with the new UK variant #COVID19 virus. pic.twitter.com/7iXYEJhQyZ
— Ministry of Health (@MoHFW_INDIA) January 1, 2021