நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நான்கு மாதபெண் குழந்தை உயிரிழந்தது.இந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு சூரத் வழியாக சென்றது. சூரத்தில் ப்ரீத்தி ஜிண்டால் என்ற பெண் அவரது நான்கு வயது ரியா என்ற குழந்தை மற்றும் ரியாவின் தாத்தா , பாட்டி ஆகியோர் விமானத்தில் ஏறியுள்ளனர்.
அப்போது ப்ரீத்தி தனது மகள் ரியாவிற்கு அதிகாலை 5.30 மணியளவில் உணவு கொடுத்து உள்ளார்.அதன் பிறகு குழந்தை தூங்கி உள்ளது.பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.
குழந்தை நன்றாக தூங்கிக்கொண்டிருப்பதாகக் குடும்பத்தினர் நினைத்து கொண்டனர். பின்னர் மும்பையில் தரையிறங்கியபின் விமான டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தை அசைவு இல்லாமல் இருந்தது .இதை உணர்ந்த குடும்பத்தினர் அவசர மருத்துவ உதவி கேட்டனர்.
இதை தொடர்ந்து விமான நிலைய மருத்துவ அறைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.அங்கு குழந்தையின் இருதய நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். குழந்தை இப்படி இறந்தது என்பது பிரேதபரிசோதனைக்கு பின் கூறமுடியும் என மருத்துவர்கள் கூறினர்.
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…