கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 24 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் குறிப்பிடப்பட்ட 12 பேரிடர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மொத்த ஒதுக்கீடு ரூபாய் 22,351 கோடிதான் எனவும், ஆனால் கொரோனா தொற்றால் இதுவரை 3.85 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும், மேலும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் எனவே ஒவ்வொரு கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். மொத்த செலவினம் இன்னும் அதிகரிக்கக்கூடும்.
இவ்வாறு இழப்பீடு வழங்குவதன் மூலம் ஏற்படும் கூடுதல் நிதி சுமையால் சுகாதாரம் மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதி குறையும் எனவும், வெள்ளப்பெருக்கு நிலநடுக்கம் புயல் போன்ற பேரிடர்கள் போலல்லாமல், கொரோனாவிற்கு பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள், தடுப்பூசிகள் என மத்திய அரசும் மாநில அரசும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து உள்ளதாகவும், இன்னும் எத்தனை கோடி செலவழிக்க வேண்டும் என்பதே தெரியாது எனவும், அடுத்து வரக்கூடிய கொரோனா அலையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…