ரயில்வே துறையில் 4 லட்சம் புதிய பணியிடம்….அமைச்சர் உறுதி…!!
ரயில்வேதுறையில் புதிதாக நான்கு லட்சம் பணியிடம் அமர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ள அனுரத் விரைவு ரயில் உட்பட 22 ரயில்களின் சேவை நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டு பேசிய அவர் இந்த அறிவிப்பை தெரிவித்தார்.
ரயில்வே துறையில் காலியாக இருந்த 2.82 லட்ச மொத்த பணியிடங்களில், 2017ஆம் ஆண்டு 1.51 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக் காட்டிய அவர் , 2019-20 ல் 53 ஆயிரம் பணியிடங்கள் , 2020 -21 ஆம் ஆண்டுகளில் 46 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அமைச்சர பியூஷ் கோயல் தெரிவித்தார்.
நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் மொத்த பணியிடங்களில் முதல் கட்டமாக 1.31 லட்சம் காலியிடம் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நிரப்பப்படும்.மீதம் இருக்கும் 99 ஆயிரம் பணியிடங்கள் 2021க்குள் நிரப்பப்படும் என்று உறுதி அளித்தார்.