ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இடம் பில்லா அணைக்கட்டு உள்பகுதியில் நேற்று கிராமத்தினர் சிலர் மாடு மேய்த்த படி வேலை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அந்நேரம் அவ்வழியே செல்லக்கூடிய உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் 65 வயது மூதாட்டி உட்பட 4 பேர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இருப்பினும் நான்கு பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் மூதாட்டி, இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். இந்த மின்சார தாக்குதலில் ஒரு மாடும் உயிரிழந்து உள்ளது. மின்சார கம்பி அறுந்து விழுந்து 4 பேர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டடுள்ளனர்.
மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்யும்படி பலமுறை தாங்கள் மின்சார வாரியத்தில் கூறியதாகவும், ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் தான் தற்பொழுது இப்படிப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனார். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…