BMW கார் மோதி 4பேர் காயம் , விபத்துக்கு காரணம் என்னுடைய நாய் தான் – பிரபல ஆடை வடிவமைப்பாளர்
டெல்லியில் BMW கார் மோதி 4பேர் காயமடைந்துள்ளனர் .இதற்கு காரணம் அவரது நாய் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் .
டெல்லியில் லஜ்பத் நகரின் அமர் காலனி பகுதியில் 29 வயது பெண் ஒருவர் ஓட்டிவந்த BMW கார் மோதி 4 பேர் காயமடைந்துள்ளனர் .இந்த விபத்தானது வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு நடந்துள்ளது,இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது .விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த பெண் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார் .பின்பு அங்கிருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கும் பொழுது அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரோஷ்னி அரோரா என்று தெரியவந்தது .
இதுகுறித்து அந்த பெண் தெரிவிக்கையில் தான் ஐஸ்கிரீம் வாங்க காரில் வந்ததாகவும் ,அப்பொழுது தனது காருக்குள் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது தனது நாய் வெளியே குதித்தபோது வாகனத்தின் கியர் தற்செயலாக மாறியது, இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்தது என்று கூறி நாயின் மீது குற்றம்சாட்டியுள்ளார் .
இந்த விபத்தில் ஐஸ்கிரீம் விற்பனையாளர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர் .அமர் காலனி காவல் நிலையத்தில் அதிவேகமாக கார் ஓட்டியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது .பின்பு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் .