மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடத்தில் சிலிண்டர் வெடித்து 4 பேர் காயம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
புனேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இன்று காலை 7 மணியளவில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் இரண்டு குடியிருப்புகளின் பொதுவான சுவர் இடிந்து விழுந்துள்ளது என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து கூறிய, காவல் அதிகாரி ஒருவர் சிலிண்டர் இரவில் கசிந்திருக்கலாம் அல்லது வீட்டிலுள்ள மின்சார விளக்கை இயக்கும் போது சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், முதல் கட்ட தகவல்களின்படி, நான்கு பேர் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.