ஒரே மேடையில் திருமணம் செய்துக்கொள்ள போகும் கேரளாவின் பிரபலமான 4 பெண்கள்

Published by
Dinasuvadu desk

கேரளாவில் 1995 நடந்த ஒரு மகிழ்ச்சியான தருணம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் மிக பிரபலமாக பேசப்பட்டது காரணம் அங்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள் ( 4 பெண் ஒரு ஆண் ) தான் .
அந்த 5 குழந்தைகளும் தாங்கள் பிறந்தது முதல் அனைத்து செயல்களிலும் ஒன்றாக செயல்பட்டனர் பள்ளி சென்ற முதல் நாள் ,முதல் நாள் கல்லூரி ,முதல் வாக்கு என தொடரும் இவர்களின் இந்த அற்புதமான நினைவுகள் இவர்களின் திருமணமும் அடுத்த ஆண்டு  ஏப்ரல் 26 இல் ஒரே மேடையில் நடக்க இருக்கிறது.இந்த பெண்களின் சகோதரன்  அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த தந்தை இந்த குழந்தைகளுக்கு உத்ராஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் உத்ராஜன் என்று பெயர் சூட்டினார் .இந்த பெயர் சூட்ட காரணம் அவர்கள் மலையாள நாட்காட்டியில் உத்ரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏன்.அவர் தனது வீட்டின் பெயரையும் பஞ்ச ரத்தினங்கள் என்று மாற்றினார்.
இந்த அபூர்வ 5 ரத்தினங்களின் தந்தை ஒரு வணிகர் தாயோ ஒரு இருதய நோயாளி.அவரது மனைவிக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டபோது, குடும்பம் ஒன்றன் பின் ஒன்றாக நிதி சிக்கலில் சிக்கியது.
குழந்தைகள்  பிறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தை 2004 ல் தனது உடல்நிலை சரியில்லாத மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகம் அரசை திகைக்க வைத்தது. “மறுபக்கத்தை” பார்க்க தவறியதாக பலர் ஊடகங்களை குற்றம் சாட்டினர்.
தனது கணவர் இறந்த மீளாத்துயரில் இருந்த அந்த தாய் தனது குழந்தைகளுக்காக வாழ முடிவு செய்தார்.அதன் படி ஒரு மகள் ஆடை வடிவமைப்பாளர், இருவர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றவர் ஆன்லைன் எழுத்தாளர். அவர்களின் சகோதரர் உத்ராஜன் ஒரு வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார் .இது அந்த தாய்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி .
ஒரு பெண் தனியாக போராடி தனது 5 குழந்தைகளையும் இந்த சமூகத்தில் உயர்ந்தவர்களாக உயர்த்தியுள்ளார் என்றால் அது மிகையல்ல வாழ்த்துக்கள் !
 
 
 
 
 

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

2 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

4 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

4 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

6 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

7 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

7 hours ago