ஒரே மேடையில் திருமணம் செய்துக்கொள்ள போகும் கேரளாவின் பிரபலமான 4 பெண்கள்
கேரளாவில் 1995 நடந்த ஒரு மகிழ்ச்சியான தருணம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் மிக பிரபலமாக பேசப்பட்டது காரணம் அங்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள் ( 4 பெண் ஒரு ஆண் ) தான் .
அந்த 5 குழந்தைகளும் தாங்கள் பிறந்தது முதல் அனைத்து செயல்களிலும் ஒன்றாக செயல்பட்டனர் பள்ளி சென்ற முதல் நாள் ,முதல் நாள் கல்லூரி ,முதல் வாக்கு என தொடரும் இவர்களின் இந்த அற்புதமான நினைவுகள் இவர்களின் திருமணமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 இல் ஒரே மேடையில் நடக்க இருக்கிறது.இந்த பெண்களின் சகோதரன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த தந்தை இந்த குழந்தைகளுக்கு உத்ராஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் உத்ராஜன் என்று பெயர் சூட்டினார் .இந்த பெயர் சூட்ட காரணம் அவர்கள் மலையாள நாட்காட்டியில் உத்ரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏன்.அவர் தனது வீட்டின் பெயரையும் பஞ்ச ரத்தினங்கள் என்று மாற்றினார்.
இந்த அபூர்வ 5 ரத்தினங்களின் தந்தை ஒரு வணிகர் தாயோ ஒரு இருதய நோயாளி.அவரது மனைவிக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டபோது, குடும்பம் ஒன்றன் பின் ஒன்றாக நிதி சிக்கலில் சிக்கியது.
குழந்தைகள் பிறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தை 2004 ல் தனது உடல்நிலை சரியில்லாத மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகம் அரசை திகைக்க வைத்தது. “மறுபக்கத்தை” பார்க்க தவறியதாக பலர் ஊடகங்களை குற்றம் சாட்டினர்.
தனது கணவர் இறந்த மீளாத்துயரில் இருந்த அந்த தாய் தனது குழந்தைகளுக்காக வாழ முடிவு செய்தார்.அதன் படி ஒரு மகள் ஆடை வடிவமைப்பாளர், இருவர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றவர் ஆன்லைன் எழுத்தாளர். அவர்களின் சகோதரர் உத்ராஜன் ஒரு வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார் .இது அந்த தாய்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி .
ஒரு பெண் தனியாக போராடி தனது 5 குழந்தைகளையும் இந்த சமூகத்தில் உயர்ந்தவர்களாக உயர்த்தியுள்ளார் என்றால் அது மிகையல்ல வாழ்த்துக்கள் !