டெல்லியில் லாரிகள் மோதிய விபத்தில், 4 பக்தர்கள் பலி, 15 பேர் காயம்.!

டெல்லியில் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
டெல்லியின் ஜிடி கர்னால் சாலையில் இன்று பக்தர்களை ஏற்றிச்சென்ற டிரக் மீது, வேகமாக வந்த மற்றொரு டிரக் மீது மோதியதில் பெரும் விபத்துக்குள்ளாகி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த பக்தர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக டிசிபிகூறினார்.
அதிவேகமாக டிரக்கை ஓட்டிவந்த ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடி விட்டார் எனவும், உயிரிழப்பை ஏற்படுத்திய மற்றும் கவனக்குறைவாகவும், வேகமாகவும் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கன்வர் யாத்திரைக்கு பக்தர்களை அழைத்துச்சென்ற டிரக் நங்லோயிலிருந்து ஹரித்வாருக்குச் சென்ற போது, டெல்லி நோக்கி வேகமாக வந்த மற்றொரு டிரக் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.