மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சீர்குலைந்தன.
தகவலறிந்த பேரிடர் மீட்புக்குழு, மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இதில் பலர் காயமடைந்ததாகத் தெரிகிறது. விபத்தில் ஐந்து பயணிகள் இறந்துள்ளனர், 20-25 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே, இந்த விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து செய்தியறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…