இந்தியா உட்பட 4 நாடுகள் இணைந்து ஜப்பானில் போர் பயிற்சி
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து குவாட் எனும் அமைப்பை உருவாகின. இந்த குவாட் அமைப்பானது ஒன்றிணைந்து கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டன.
ஜப்பான் கடற்படையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர்.
இதில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்கள், கடல்சார் ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள், 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டன.
இந்த கூட்டுப்பயிற்சியானது, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமையும் என கூறப்படுகிறது.