MTMA எனும் நெதர்லாந்து போதைப்பொருளை விற்பனை செய்ததற்காக 4 கல்லூரி மாணவர்கள் கைது!
பெங்களூருவில் MTMA எனும் நெதர்லாந்து போதைப்பொருளை விற்பனை செய்ததற்காக 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்.டி.எம்.ஏ எனும் போதைப்பொருள் மிக விலையுயர்ந்தது, அதே சமயம் தடை செய்யப்பட்ட போதை பொருள். இந்நிலையில்,பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவர்கள் நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எம்.டி.எம்.ஏ எனும் போதை பொருளை வாங்கியுள்ளனர்.
இவர்கள் நால்வரும் வாங்கியது மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களிடமும் விற்பனை செய்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் அந்த 4 மாணவர்களையும் பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 750 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.