பஞ்சாபில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 4 மசோதாக்கள் நிறைவேற்றம்.!
சமீபத்தில் மத்திய அரசு பல எதிர்ப்புக்கள் மத்தியில் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பின்னர், ஜனாதிபதி அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப் சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரை சந்தித்து முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தி உள்ளார்.