ஆட்டை திருடுவதற்காக 12 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மன்சூர் எனுமிடத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் அவனது வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ப்பதற்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்று ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அந்த சிறுவனை சிலர் பின் தொடர்ந்து அவனது ஆடுகளில் ஒன்றை பிடிக்க முயன்றனர். இதனால் அந்த சிறுவன் கோபமுற்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ள்ளான். எனவே அவர்கள் அந்த சிறுவனை கழுத்தை பிடித்து நெரித்து பெரிய கல் ஒன்றை வைத்து அடித்துள்ளனர், இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான். பின் சிறுவனை காணவில்லை என குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் தேட ஆரம்பித்துள்ளனர், அப்பொழுது ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் காட்டில் இறந்து கிடந்ததை போலீசார் கண்டுள்ளனர்.
மேலும், அவர்கள் அனைவரும் அந்த சிறுவன் ஆட்டை மேய்ப்பதற்காக வெளியில் கொண்டு செல்லும் போதே அவனை பின் தொடர்ந்து சென்று உள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை அதே கிராமத்தில் வசிக்க கூடிய சஞ்சய் நிர்மல்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சஞ்சய் தான் முக்கிய குற்றவாளியாக போலீசார் கருதுகின்றனர். அதன்பின் இதற்கு உடந்தையாக இருந்த மேலும் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனின் கொலை குறித்து அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு ஆட்டிற்காக சிறுவனை கொலை செய்த சம்பவம் மன்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…