ராஜஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் – 4.8 ரிக்டராக பதிவு!
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவு என தேசிய புவியியல் மையம் தகவல்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கத்தால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 7.42 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிகானிரியில் நேற்று அதிகாலை 5:24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியிருந்தது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவல் வெளியாகவில்லை, இந்த இன்று மீண்டும் அப்பகுதியில் நிலா அதிர்வு ஏற்பட்டுள்ளது.