ராஜஸ்தானில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
ராஜஸ்தானின் வடமேற்கே பிகானேர் பகுதியில் நேற்று இரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து நிலநடுக்க தேசிய மையம் படி, இந்த நிலநடுக்கம் இரவு 09:57 மணிக்கு ஏற்பட்டது எனவும், நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இருந்தது என Mதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை. இருந்தாலும், நிலநடுக்க ஏற்பட்ட பகுதியின் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.