பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றி ரூ.4.55 லட்சம் கோடி கொள்ளை – சீதாராம் யெச்சூரி
பெட்ரோ பொருட்கள் மீதான மத்திய வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி ட்வீட்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றி மக்களிடமிருந்து 4.55 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொள்ளை அடித்துள்ளது என்று குற்றசாட்டியுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ரூ.3.34 லட்சம் கோடியில் இருந்து 36% அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் வருவாய் தேக்கம் அடைந்துள்ளது. வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் சீரழிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் பொருட்கள் மீதான மத்திய வரிகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Centre’s loot raked in ₹4.55L Cr from taxes on petroleum products.
Up 36% from ₹3.34L Cr last year.
Revenue of all states remained stagnant!
Centre must stop ruining lives, & economy.
Withdraw central taxes on petro products. pic.twitter.com/0GHjBduEVa— Sitaram Yechury (@SitaramYechury) December 21, 2021