முதல் கட்டமாக கேரளா மாநிலத்திற்கு 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை மந்திரி கேகே சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸை ஒழிக்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பின், வருகின்ற 16ம் தேதி முதல் நாடு முழுவதிலும் தடுப்பூசி போடக்கூடிய பணிகள் துவங்கப்படுகிறது. தற்பொழுது புனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கூறியுள்ள கேரளா சுகாதாரத்துறை மந்திரி கேகே சைலஜா அவர்கள், கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ள 4,33,500 தடுப்பூசிகளில் திருவனந்தபுரத்திற்கு 1,34,000 தடுப்பூசிகளும், எர்ணாகுளத்துக்கு 1,80,000 தடுப்பூசிகளும், கோழிக்கோட்டுக்கு 1,19,500 தடுப்பூசிகளும் வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். மேலும், கோழிக்கோட்டில் இருந்து 1,500 தடுப்பூசிகள் மகேவுக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 133 தடுப்பூசி மையங்களில் முதல் கட்டமாக வருகிற சனிக்கிழமை முதல் கேரளாவில் தடுப்பூசி போடப்படும் எனவும், அனைத்து மையங்களிலும் தடுப்பூசிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசி போடுவதற்காக 3 லட்சத்து 62 ஆயிரத்து 870 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…