மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை.! மத்திய அரசுக்கு அவசியமான அறிவுறுத்தல்.! உச்சநீதிமன்றம் அசத்தல்.!
3ஆம் பாலினத்தவர்களுக்கும் எந்தவித பாகுபாடு இல்லாமல் வேலை வழங்கபடுவதற்கு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஷானாவி பொன்னுசாமி எனும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டர்ஸ் எனப்படும் விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்து வருகிறார்.
ஆனால், அவர் அந்த வேலை விண்ணப்பத்தை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளனர். இது குறித்து, சட்ட ரீதியாகவும், உச்சநீதிமன்றத்தில் போராடி வருகிறார் ஷானாவி பொன்னுசாமி.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது மிகவும் சென்சிட்டிவான வழக்கு என கூறியிருந்தார். இது குறித்து அரசுதரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதில்பதிலளித்த , அரசு வழக்கறிஞர், 3ஆம் பாலினத்தவர்களின் பாதுகாப்பு, அடிப்படை விஷயங்கள் மட்டுமே சட்டத்தில் இருப்பதை குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஆண் , பெண் போல 3ஆம் பாலினத்தவர்களுக்கும் எந்தவித பாகுபாடு இல்லாமல் வேலை வழங்கபடுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதன் அறிக்கையை மத்திய அரசு 3மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.