ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் 30 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் 1 கோடி இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

Microsoft CEO Satya nadella - PM Modi

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப முன்னேற்றம், பொதுவான தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து இன்று சத்யா நாதெல்லா இந்தியாவில் AI தொழில்நுட்பம் சார்ந்து சுமார் 30 பில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 25,718 கோடி)  முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 1 கோடி இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் வெளியான தகவலின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் AZURE கிளவுட் தொழில்நுட்பத்தை இந்தியாவில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தாண்டு இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு AI தொழில்நுட்பம் சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தங்கள் நிறுவன செயல்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என சத்யா நாதெல்லா தெரிவித்ததாக PTI செய்தி குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்