டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 394 போலீஸ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் நேற்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியது. இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. செங்கோட்டையை முற்றிகையிட்ட விவசாயிகள், அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர். பின்னர் வன்முறை தீவிரம் காரணமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வன்முறையில் 394 போலீஸ் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் ஐ.சி.யூ வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், டெல்லி காவல்துறையால் 25க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக அடையாளம் காணும் முறையைப் பயன்படுத்துகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண சி.சி.டி.வி மற்றும் வீடியோ காட்சிகளின் சேகரித்து வருகிறோம். எந்த குற்றவாளியும் எங்களிடம் இருந்து தப்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு, 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசநரனை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…