இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருள்களுக்காக 38,900 கோடி ஒப்புதல்!
இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 38 ஆயிரத்து 900 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருந்து கொண்டு இந்திய மக்களின் உயிரை காக்கும் உன்னத பணியை செய்து வரக்கூடிய ராணுவத்தினரின் தற்காப்பை பலப்படுத்தக்கூடிய விதமாகவும், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பிற்கும் ஏற்றவாறு தற்பொழுது இந்திய ராணுவ படையினருக்கு தேவையான பல்வேறு தளவாடங்கள் மற்றும் சாதன பொருட்கள் வாங்குவதற்கான நிதியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதலுடன் பரீசிலிக்கப்பட்டுள்ளது.
சுமார் 38 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான பொருட்கள் வாங்குவதற்காக இந்த ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் இந்திய தொழிற்சாலைகளிலிருந்து 31 ஆயிரத்து 130 கோடி அளவுக்கு சாதனங்கள் வாங்குவதற்கான ஒப்புதலும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து மிக்-29 ரக விமானங்கள் வாங்குவதற்கே இதில் 7.4 114 கோடி செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.