ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா.. திணறும் மகாராஷ்டிரா!

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 124331 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 142 பேர் இந்த வைரஸ் தோற்றால் உயிரிழந்துள்ளனர். அதில், 1935 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 62773 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு 55651. பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025