மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஸ்வைபிங் எந்திரம் மூலம், டெபிட், கிரெடிட் கார்டுகள் பண பரிமாற்றம் செய்வதை வலிந்து திணிப்பதன் மூலம் வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,800 கோடி இழப்பு ஏற்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே முதலீடு இல்லாமலும், வாராக்கடன்களாலும் தவித்து கொண்டு இருக்கும் வங்கிகளுக்கு கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் திட்டத்தை ஊக்கப்படுத்துவது மேலும் இழப்பில் கொண்டு போய் விடும்.
கள்ள நோட்டு, ஊழல், கருப்புபணத்தை ஒழிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதிரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்களைடிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற ஊக்கப்படுத்த மத்திய அரசு பல திட்டங்களையும்,சலுகைகளையும் அறிவித்தது.
குறிப்பாக டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய ஊக்கப்படுத்தியது. இதற்காக வர்த்தகர்கள் பாய்ன்ட் ஆப் சேல் எந்திரமான ஸ்வைப்பிங் மெஷின்களை வாங்கி வைக்க வலியுறுத்தியது. அதற்கு ஏற்றார்போல் அவர்களும் வங்கிகளில் பி.ஓ.எஸ். எந்திரங்களை வாங்கி வைத்தனர்.
ரூபாய் நோட்டு தடைக்கு முன்பாக அதாவது 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் 13.6 லட்சம் பி.ஓ.எஸ். எந்திரங்கள் இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 28.4 லட்சமாக உயர்ந்தது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பி.ஓ.எஸ். எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக டெபிட் கார்டு பரிமாற்றம் தொடக்கத்தில் அதிகரித்தது. 2016, அக்டோபரில், ரூ.51 ஆயிரத்து 900 கோடி இருந்த நிலையில், கடந்த ஜூலை ரூ.68 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்தது. அதிகபட்சமாக கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.89 ஆயிரத்து 200 கோடியாக இருந்தது.
இந்நிலையில், தற்போது பி.ஓ.எஸ். எந்திரங்கள் மூலம் அதாவது கிரெடிட், டெபிட் கார்டு மூலம் செய்யும் பரிமாற்றம் குறைந்து வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இதை நிலை நீடித்தால் பி.ஓ.எஸ். எந்திரத்தின் வழங்கியதின் செலவை ஈடுகட்ட முடியாது என ஸ்டேட்வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டேட் வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “ பி.ஓ.எஸ். எந்திரங்கள் மூலம் வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.4700 கோடி இழப்பு ஏற்படுகிறது.அதேசமயம், ஒரு வங்கி வழங்கியுள்ள பி.ஓ.எஸ். எந்திரம் மூலம் ஆண்டுக்கு ரூ.900 கோடி வருவாய் ஈட்டுகிறது. இதை ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால், ஆண்டுக்கு பி.ஓ.ஒஸ். எந்திரம் வழங்கியதன் மூலம் ரூ.3800 கோடி வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…