உத்தரப் பிரதேசம் : மாநிலத்தில் வெவ்வேருபகுதிகளில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் 38 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் முக்கிய மாவட்டங்களான பிரதாப்கரில் 11 பேர் உயிரிழந்தனர் அதைத் தொடர்ந்து சுல்தான்பூரில் 7 பேர், சந்தௌலியில் 6 பேர், மெயின்புரியில் 5 பேர், பிரயாக்ராஜில் 4 பேர், அவுரியா, தியோரியா, ஹத்ராஸ், வாரணாசி மற்றும் சித்தார்த்நகரில் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் மொத்தம் 38 பேர் பலியாகினர்
இதற்கிடையில், கிழக்கு உத்தரபிரதேசத்தின் சந்தௌலியில், பலர் மின்னல் தாக்கி காயமடைந்து தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த புதன் கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
சுல்தான்பூரில் உயிரிழந்த ஏழு பேரில், மூன்று குழந்தைகள். நெல் நடவு செய்யும் போது அல்லது மாம்பழம் பறிக்க அல்லது தண்ணீர் எடுக்கச் சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பெண் மரத்தடியில் தஞ்சமடைந்திருந்த போது, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனிடையே, உத்தரப் பிரதேசம் மற்றும் அதன் அருகிலுள்ள யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…