சோகம்!! உ.பி.யில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு.!

lightning strikes

உத்தரப் பிரதேசம் : மாநிலத்தில் வெவ்வேருபகுதிகளில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் 38 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் முக்கிய மாவட்டங்களான பிரதாப்கரில் 11 பேர் உயிரிழந்தனர் அதைத் தொடர்ந்து சுல்தான்பூரில் 7 பேர், சந்தௌலியில் 6 பேர், மெயின்புரியில் 5 பேர், பிரயாக்ராஜில் 4 பேர், அவுரியா, தியோரியா, ஹத்ராஸ், வாரணாசி மற்றும் சித்தார்த்நகரில் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் மொத்தம் 38 பேர் பலியாகினர்

இதற்கிடையில், கிழக்கு உத்தரபிரதேசத்தின் சந்தௌலியில், பலர் மின்னல் தாக்கி காயமடைந்து தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த புதன் கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

சுல்தான்பூரில் உயிரிழந்த ஏழு பேரில், மூன்று குழந்தைகள். நெல் நடவு செய்யும் போது அல்லது மாம்பழம் பறிக்க அல்லது தண்ணீர் எடுக்கச் சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பெண் மரத்தடியில் தஞ்சமடைந்திருந்த போது, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனிடையே, உத்தரப் பிரதேசம் மற்றும் அதன் அருகிலுள்ள யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்