மாநிலங்களின் கையிருப்பில் 38 லட்சம் தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 58,31,73,780 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 56,29,35,938 தடுப்பூசிகளை மாநிலங்கள் பயன்படுத்திவிட்டது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 38,00,030 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 81,10,780 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு 56.64 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திருத்தப்பட்ட கொள்கையை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என…
தூத்துக்குடி -கந்த சஷ்டி விழாவானது கடந்த நவம்பர் இரண்டாம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கிய நிலையில் ஆறாம் நாளாளின் முக்கிய…
சென்னை : சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கம்…
சென்னை : எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின்…
திருப்பத்தூர் : சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையிலும் தனித்தே…