377 ஆபாச இணையதளங்களை நீக்க உத்தரவு-ஸ்மிருதி இரானி..!

Default Image

நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் விஜிலா சத்யானந்த் பேசுகையில், செல்போனிலும் , இணையதளங்களிலும் எளிதாக ஆபாச படங்கள் கிடைப்பதால் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் குறித்து கூறினாா்.
தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில்  கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடா்பாக 5,951 புகாா்கள் வந்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 17 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் பெண் குழந்தைகள் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக கூறியுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.நமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என கூறினார். இவரது  கோரிக்கையை பல உறுப்பினா்கள் ஆதரிப்பதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய பெண் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுவரை இது போன்ற புகார்கள் தொடர்பாக 50 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும், அத்துடன் 377 இணையதள சேவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்