363 காலியிடங்கள்…! UPSC ஆட்சேர்ப்பு பணிகள் ஒத்திவைப்பு…!
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, நாடே பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், கல்வி இயக்குநரகம், கல்வித் துறை, டெல்லியின் என்.சி.டி ஆகியவற்றில் உள்ள 363 முதன்மை பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு பணியை ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால், UPSC ஆட்சேர்ப்பு பணிகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஆட்சேர்ப்பு பணிக்கான திருத்தப்பட்ட தேதிகளை யுபிஎஸ்சி சரியான நேரத்தில் அறிவிக்கும். யூனியன் பொது சேவை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளம் upc.gov.in. மேலும், யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு 2021 குறித்த மேலதிக தகவல்களை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.