இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 4,120 பேர் உயிரிழப்பு…!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,120 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுபடுத்தும் நோக்கில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,120 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,37,03,665 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,58,317 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,52,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 37,10,525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும், 17,72,14,256 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.