சென்னை இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுக்கு பின் விமான சேவை..!

Default Image

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் 1940-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வான்படை தேவைக்காக விமான தளம் அமைத்தனர்.பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்தது.அதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து பலாலி வழியாக கொழும்பிற்கு விமானம் இயங்கி வந்தது.
இந்நிலையில் 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது  பலாலி விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த உள்நாட்டு யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இந்தியாவின் நிதி உதவியுடன் விமான நிலையமாக புனரமைக்கும் பணி தடைபட்டு வந்தது.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அடிக்கல் நாட்டினர்.
பின்னர் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து பணிகள் முடிந்த நிலையில் விமானம் நிலையம் திறக்கப்பட்ட விமான சேவை தொடங்கியுள்ளது. முதல்முறையாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விமானம் சென்றது.
முதல் கட்டமாக மதுரை, சென்னை ,திருச்சி மற்றும்  மும்பை பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்குகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்