10 நாட்களில் 36,00,000 தொழிலாளர்களை மீட்க 2500 ஷர்மிக் ரயில்கள்
அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் தெரிவித்தார்.
ஜுன் 1-ம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என்றும், 80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.
மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் தெரிவித்தார். சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் மே 26-ம் தேதி வரை மேற்கு வங்கத்துக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில் இயக்க வேண்டாம் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி தெரிவித்து இருந்த நிலையில், மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டால் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் தெரிவித்தார்.