ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் ரூ.36 லட்சம் பறிமுதல்..!

Hemant Soren

ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பணமோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 முறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில் 8-வது முறையாக ஜனவரி 13 ஆம் தேதி, அமலாக்க இயக்குனரகம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. ஜனவரி 16 முதல் ஜனவரி 20-க்குள் நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சம்மனுக்கு பதிலளித்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்  ஜனவரி 20-ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என கடிதம் எழுதியிருந்தார். பின்னர் கடந்த 20-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

இருப்புனும் அமலாக்கத்துறை  ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜனவரி 29 அல்லது 31 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறி அவருக்கு புதிய சம்மன் அனுப்பியது. இதற்கிடையில் ஹேமந்த் சோரன் சனிக்கிழமை டெல்லி சென்றடைந்தார். நேற்று காலை டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்திற்கு அமலாக்கக் குழு சென்றடைந்தது.

பாஜக பிரமுகர் கொலை வழக்கு – கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

ஆனால் அங்கு முதல்வர் ஹேமந்த் காணவில்லை. நேற்று முதல் தற்போது வரை ஹேமந்த் சோரன் எங்கு உள்ளார் என்ற தகவல் ஏதும் தெரியவில்லை. டெல்லி இல்லத்தில்அமலாக்கத்துறை சோதனை செய்ததில் ரூ.36 லட்சம் ரொக்கத்தையும் மற்றும் இரண்டு கார்களையும் பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ராஜ்பவனில் உள்ள வீடு மற்றும் ராஞ்சியில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தின் 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்