36 மாவட்டங்கள் மீது கவனம் தேவை – மருத்துவ கவுன்சில்
இந்தியாவில் உள்ள 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறு தொற்றும் கொரோனாவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள
15 மாநிலங்களில் இருக்கும் 36 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சுவாசக் கோளாறு இருக்கும் நோயாளிகளிடம் ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வில்,
40 % பேர் எந்த விதமான வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. மேலும் கொரோனா உள்ளவர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த 36 மாவட்டங்களுக்கும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகம் மற்றும் டெல்லியில் தலா 5 மாவட்டங்களிலும்,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும், மேற்கு வங்காளத்தில் 6 மாவட்டங்களிலும், கடுமையான சுவாசக் கோளாறு தொற்று நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருக்கும் நோயாளிகள் வெறும் 1 % மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.