மகாராஷ்டிராவில் 352 பேருக்கு எச்3என்2 (H3N2) வைரஸ் பாதிப்பு.
H3N2 தொற்று : இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளுயன்சா H3N2 (Influenza H3N2) வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது. H3N2 வைரஸ் என்பது இன்ஃப்ளூயன்ஸா A வகை வைரஸின் துணை வகை ஆகும். இந்த வைரஸ் தொற்று பொதுவாக பன்றிகள் பறவைகள் மற்றும் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது.
பீதி அடையத் தேவையில்லை : தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 352 பேருக்கு எச்3என்2 (H3N2) வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் தெரிவித்துள்ளார். வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். H3N2 வைரஸ் ஆபத்தானது அல்ல, மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் அதனால் மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் கூறினார்.
மார்ச் இறுதிக்குள் குறையும் : நாடு முழுவதும் அதிகரித்து வரும் H3N2 பாதிப்புகளுக்கு மத்தியில், நிகழ்நேர அடிப்படையில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மூலம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகால காய்ச்சல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் இறுதிக்குள் இந்த பாதிப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…