8 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்.!
மகாராஷ்டிராவில் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டு 5% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லையென்றாலும் மாநிலத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 5% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள 25,866 பள்ளிகளில் 9,127 பள்ளிகள் திறக்கப்பட்டது . மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 59,27,456 .இதில் 2,99,193 மாணவர்கள் நேற்று பள்ளியில் சென்று வகுப்புகளில் கலந்த கொண்டுள்ளனர்.மேலும் மகாராஷ்டிராவில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்காக 2,75,470 ஆசிரியர்கள் உள்ள நிலையில், அவர்களில் 1,41,720 ஆசிரியர்களும் ,44,313 ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் ,அதில் 1,353 ஆசிரியர்கள் மற்றும் 290 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளில் வரும் மாணவர்கள் முதலில் வெப்பமானி மூலம் திரையிடப்பட்டு, ஆக்ஸிஜன் அளவு சரிபார்க்கப்பட்டது .அதன்பின் சுத்திகரிக்கப்பட்ட வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.அதே போன்று புனே மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 1,200க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ள நிலையில்,அவைகளில் 215 பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டு 9,431 மாணவர்கள் மட்டும் வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர் .